நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் பிளாஸ்ட் படத்தில் நடிக்க உத்வேகம் அளித்ததாகக் கூறியுள்ளார்.
தெலுங்கில் நடிகையாக அறிமுகமான ப்ரீத்தி, தமிழில் நடிகர் கவினுடன் ஸ்டார் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின், பான் இந்திய படமான கண்ணப்பாவில் நடித்தாலும் ப்ரீத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமலே இருந்தது.
இந்த நிலையில், அண்மையில் வெளியான பிளாஸ்ட் திரைப்படத்தில் முன்னணி நாயகியாக நடித்து, சண்டைக்காட்சிகளில் அசத்தியிருந்தார்.
எந்தக் காதல் காட்சிகளும் இல்லாமல் முழுக்க, முழுக்க தன்னுடைய சண்டைக் காட்சிகளில் சிறப்பான நடிப்பை ப்ரீத்தி முகுந்தன் கொடுத்திருந்தது ரசிகர்களை ஈர்த்துள்ளது. இதனால், பலரும் ப்ரீத்தியை, ஆக்ஷன் குயின் என்றும் ஆக்ஷன் அழகே என்றும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பிளாஸ்ட் படம் குறித்துப் பேசிய ப்ரீத்தி முகுந்தன், “இந்தப் படத்திற்காக கராத்தே கற்றுக்கொண்டு, சரியாக நடிக்க வேண்டும் என்பதற்காகக் கடினமாக உழைத்தேன். ஆக்ஷன் காட்சிகளுக்கு விக்ரம் படத்தில் தோன்றிய ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் பெரிய உத்வேகமும் அளித்தது. தொடர்ந்து, நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். தென்னிந்திய சினிமாவுடன் ஹிந்தி படங்களிலும் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ப்ரீத்தி நடிப்பில் அடுத்ததாக இதயம் முரளி, தாஷாமாக்கன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. பாலிவுட்டிலும் விரைவில் அறிமுகமாகிறார்!
Actress Preethi Mukundan has stated that the character 'Agent Tina' inspired her to act in the movie Blast.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆக்ஷன் அழகே... ப்ரீத்தி முகுந்தன்!
ஆக்ஷன் கிங்குடன் அதிரடி குயின்ஸ்... பிளாஸ்ட் - திரை விமர்சனம்!

பிளாஸ்ட் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




