நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
தெலுங்கில் நடிகையாக அறிமுகமான ப்ரீத்தி, தமிழில் நடிகர் கவினுடன் ஸ்டார் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின், பான் இந்திய படமான கண்ணப்பாவில் நடித்தாலும் ப்ரீத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமலே இருந்தது.
அண்மையில் வெளியான பிளாஸ்ட் திரைப்படத்தில் முன்னணி நாயகியாக நடித்து, சண்டைக்காட்சிகளில் அசத்தியிருந்தார்.
எந்தக் காதல் காட்சிகளும் இல்லாமல் முழுக்க, முழுக்க தன்னுடைய சண்டைக் காட்சிகளில் சிறப்பான நடிப்பை ப்ரீத்தி முகுந்தன் கொடுத்திருந்தது ரசிகர்களை ஈர்த்துள்ளது. இதனால், பலரும் ப்ரீத்தியை, ஆக்ஷன் குயின் என்றும் ஆக்ஷன் அழகே என்றும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், புரமோஷன் நிகழ்வில் பேசியபோது, “பிளாஸ்ட் கதையைத் தேர்ந்தெடுத்தது வித்தியாசமான முடிவு. என் இடத்தில் வேறு ஏதேனும் நாயகிகள் இருந்தால், இதில் நடிக்க யோசித்திருப்பார்கள். எப்போதும் ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். பிளாஸ்ட் படத்திற்காக ரசிகர்களிடமிருந்து கிடைத்த பாராட்டு மகிழ்ச்சியை அளித்தது. அடுத்ததாக, என் நடிப்பில் வெளியாகும் இதயம் முரளியில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படம் பிளாஸ்ட்டுக்கு முன்பே ஒப்பந்தமான திரைப்படம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Actress Preethi Mukundhan has stated that she wishes to play action roles.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











