எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

காவல்துறை வாகனத்தை தனியொரு ஆளாக தடுத்து நிறுத்திய பெண்! வைரலாகும் விடியோ

மும்பை போராட்டத்தில் காவல்துறை வாகனத்தை தனியொரு ஆளாக தடுத்து நிறுத்திய பெண்ணின் விடியோ வைரலாகி வருகிறது.

News image

மும்பை பெண் - from video grab

Updated On :23 ஜூலை 2026, 12:37 pm IST

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில், தில்லியில், நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது.

சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தில்லி, மும்பையில் அவ்வப்போது மழை பெய்து வரும்நிலையிலும், மழையில் நனைந்தபடி ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், மும்பையில் இன்று காலை, நீட் தேர்வுக்கு எதிராக போராடி வந்த மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றபோது, சாலையில், அந்த வாகனத்தை ஒரு பெண் தனியாக நின்று தடுத்து நிறுத்தினார்.

அந்த வாகனத்தில், ஏரளாமான மாணவர்களும் இளைஞர்களும் ஏற்றப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவிருந்த நிலையில், அந்த வாகம் மேற்கொண்டு நகராமல் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டது.

மேற்கொண்டு அந்த வாகனம் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டதால், அதிலிருந்த மாணவர்கள் இறங்கி தங்களது போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். கும்பலாக சேர்ந்து போராடுவதற்கு தைரியம் இருக்கும். ஆனால், காவல்துறை வாகனத்தை தனியொரு ஆளாக தடுத்து நிறுத்தும் அளவுக்கு தைரியம் மிக்க அந்த பெண்ணின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தில்லியில், நீட் தேர்வுக்கு எதிராகப் பற்றிய தீ தற்போது நாடு முழுவதும் போராட்டமாக எரிந்து வருகிறது.

Summary

Woman stops police vehicle single-handedly! Video goes viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.