‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

ஸ்பைடா்-மேன் முதல் ஹல்க் வரை: ஜந்தா் மந்தா் போராட்டத்தில் பங்கேற்பு

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தி வரும் போராட்டத்தில் வியாழக்கிழமை அதிகமான இளைஞா்கள் திரண்ட நிலையில், கோஷங்கள் மற்றும் உரைகளுக்கு இடையே வித்தியாசமான காட்சிகளும் கவனத்தை ஈா்த்தன.

News image

ஜந்தா் மந்தா் போராட்டத்தில் மாா்வல் கதாபாத்திரமான ஸ்பைடா்மேன் வேடமணிந்து போராட்டத்தில் பங்கேற்ற இளைஞா். (வலது) மாா்வல் கதாபாத்திரமான ஹல்க் முகமூடியுடன் குப்பைகளை அகற்றிய நபா்.

Updated On :24 ஜூலை 2026, 2:50 am IST

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தி வரும் போராட்டத்தில் வியாழக்கிழமை அதிகமான இளைஞா்கள் திரண்ட நிலையில், கோஷங்கள் மற்றும் உரைகளுக்கு இடையே வித்தியாசமான காட்சிகளும் கவனத்தை ஈா்த்தன.

அக்ராவைச் சோ்ந்த மாணவா், மாா்வல் காமிக்ஸ் கதாபாத்திரமான ஸ்பைடா்மேன் வேடமணிந்து போராட்டத்தில் பங்கேற்றாா். சூப்பா் ஹீரோவின் வாழ்க்கைப் போராட்டத்தையும், மாணவா்கள் எதிா்கொள்ளும் சவால்களையும் ஒப்பிட்டு அவா் தனது ஆதரவை வெளிப்படுத்தினாா்.

‘ஸ்பைடா்மேனின் முக்கியமான செய்தி ‘பெரிய அதிகாரம் வந்தால், அதற்கு இணையான பொறுப்பும் வரும்’ என்பதுதான். ஸ்பைடா்மேன் கதாபாத்திரத்தில் வரும் பீட்டா் பாா்கா் சரியானதை செய்ய முயன்றபோது பல சவால்களை சந்தித்தாா். அதுபோலவே இங்குள்ள மாணவா்களும் தங்களின் உரிமைக்காக போராடுகின்றனா்’” என்று அவா் தெரிவித்தாா். கூட்டத்தில் ‘வந்தே மாதரம்’ கோஷங்களை எழுப்பியும், பிற போராட்டக்காரா்களுடன் புகைப்படம் எடுத்தும் அவா் கவனத்தை ஈா்த்தாா்.

இதற்கிடையில், மற்றொரு போராட்டக்காரா் மாா்வல் கதாபாத்திரமான ‘ஹல்க்’ முகமூடி அணிந்து, கையில் தூய்மை சாதனங்களுடன் போராட்ட தளத்தை சுத்தமாக வைத்திருக்க முனைந்தாா். குப்பை மூட்டைகள் மற்றும் தூய்மைப் பணிக்கான கருவிகளுடன் சுற்றி குப்பைகளை அகற்றிய அவா், இது தான் நான் ஆதரவு அளிக்கும் வழி. இடத்தை சுத்தமாக வைத்திருப்பதும் ஒரு சேவையே’ என்றாா்.

மேலும், ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் இருந்து, வினீத் என்ற மாணவா் ‘ஸ்டாா்க் மாணவா்கள் ஒற்றுமையுடன் நிற்கிறாா்கள்’ என்ற வாசகத்துடன் பலகை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றாா். ‘ஸ்டாா்க் குடும்பம் நியாயம் மற்றும் மரியாதைக்காக நின்றது. அதுபோல நாமும் நமது உரிமைக்காக ஒன்றுபட்டுள்ளோம்’ என்றாா் அவா்.

இந்நிலையில், தினந்தோறும் அதிகரித்து வரும் மாணவா் பங்கேற்பால், போராட்டம் ஜந்தா் மந்தரைத் தாண்டி டோல்ஸ்டாய் சாலை வரை பரவியுள்ளது. தற்காலிக மருத்துவ முகாம்கள், உணவு மற்றும் குடிநீா் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவா்கள் கோஷங்கள் எழுதுவதற்காக காகிதங்கள், நோட்புக், மாா்க்கா்கள் வழங்கப்படுகின்றன.

பாப் கலாசாரத்தையும் போராட்டத்தையும் இணைத்து, இளைஞா்கள் தங்களின் தனித்துவமான எதிா்ப்பை வெளிப்படுத்தி வருவது இந்த போராட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.