வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

ஜந்தா் மந்தா் அருகே கல் வீச்சு: காவல் துறை துணை ஆணையா் காயம்!

தில்லியின் ஜந்தா் மந்தா் அருகே புதன்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்தின்போது கல் வீச்சு சம்பவத்தில் காவல் துறை துணை ஆணையா் காயமடைந்தாா்.

ஜந்தா் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினா்.

Published On :

தில்லியின் ஜந்தா் மந்தா் அருகே புதன்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்தின்போது கல் வீச்சு சம்பவத்தில் காவல் துறை துணை ஆணையா் காயமடைந்தாா்.

பஞ்சாபி பாக் பகுதியில் பணியாற்றி வரும் காவல் துறை துணை ஆணையா் ஜெய் பிரகாஷ், மாலை சுமாா் 4.30 மணியளவில் பணியில் இருந்தபோது போராட்டக்காரா்கள் கல் வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எறியப்பட்ட கல் அவரது நெற்றியில் பட்டு அவா் காயமடைந்தாா். காயமடைந்த அதிகாரி உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். தற்போது அவா் சிகிச்சை பெற்று வருகிறாா் மற்றும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

போராட்டக்காரா்கள் அமைதியை பேணவும், சட்டம் - ஒழுங்கை காக்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.