திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

தீவிரமடையும் போராட்டம்! தில்லியில் கடைகள், அலுவலகங்களை மூட ‘திடீர்’ உத்தரவு!

தில்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள கடைகள், அலுவலகங்களை மூட தில்லி வர்த்தக சங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது பற்றி...

News image

தில்லியில் உள்ள கடைகள். - கோப்புப் படம்

Updated On :23 ஜூலை 2026, 4:20 pm IST

தில்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள கடைகள், அலுவலகங்களை மூட தில்லி வர்த்தக சங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) போராடி வருகின்றனர்.

ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது தில்லி காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் பேரணியைக் களைத்தனர்.

இந்த சம்பவம் நாட்டிலேயே பரபரப்பான சூழலை ஏற்படுத்திய நிலையில் சிஜேபியினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளைக் கண்டித்தும் மாணவர் அமைப்பினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், தில்லியின் ஜந்தர் மந்தரில் சிஜேபியினரின் போராட்டம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், தில்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள கடைகள், அலுவலகங்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றை இன்று (ஜூலை 23) மாலை 6.30 மணிக்குள் மூடுமாறு தில்லி வர்த்தக சங்கம் அனைத்து வியாபாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போராட்டம் தொடர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அசம்பாவிதங்கள், சேதங்கள் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் தில்லி மாநகராட்சியின் அறிவுறுத்தலின்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தில்லி வர்த்தக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Summary

The Delhi Municipal Corporation has issued an order to close shops and offices in the Connaught Place area of ​​Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.