நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியது. 4-ம் நாளான இன்றும் நீட் வினாத் தாள் கசிவு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதத்துக்கு தயார் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்த பிறகே விவாதத்துக்கு வருவோம் என்று எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியைத் தொடர்ந்ததால், பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாள்களுமே இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் இன்றும் போராட்டம் தொடர்வதால் தில்லியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Summary
Uproar continues! Parliament stalled for the fourth day!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








