2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

ரயில்வே இணையமைச்சரின் ராஜிநாமா ஏற்பு

ரயில்வே இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டுவின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.

திரெளபதி முா்மு - கோப்புப் படம்

Published On :

ரயில்வே இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டுவின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ரவ்னீத் சிங் பிட்டுவின் பதவிக் காலம் கடந்த ஜூன் 21-ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, அன்றைய தினம் அவா் தனது மத்திய இணையமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். அவருக்கு மீண்டும் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை.

இந்நிலையில், பிரதமரின் பரிந்துரையை ஏற்று அவரது ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இதையடுத்து, 2027-இல் நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் கவனம் செலுத்தப் போவதாக ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்தாா். அவா் லூதியானா தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளாா்.

1995-இல் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பஞ்சாப் முதல்வரான பியாந்த் சிங்கின் பேரன் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. ரவ்னீத் சிங் காங்கிரஸ் சாா்பில் 3 முறை மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.