மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

முதல்வர் விஜய்யின் கர்நாடக பயணம் குறித்து அமைச்சர் வினோத் பதில்

முதல்வர் விஜய்யின் கர்நாடக பயணம் குறித்து அமைச்சர் வினோத் பதிலளித்துள்ளார்.

News image

அமைச்சர் வினோத்.

Updated On :26 ஜூலை 2026, 1:22 pm IST

முதல்வர் விஜய்யின் கர்நாடக பயணம் குறித்து அமைச்சர் வினோத் பதிலளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் என்ற இடத்தில் கழிவுநீர் வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியினை வேளாண் துறை அமைச்சர் இன்று காலை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத், வரும் மழைக்காலங்களில் கும்பகோணம் நகரில் மழை நீர் தேங்காத வகையில் கும்பகோணத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தற்போது 70 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்படுகிறது.

இந்தப் பணிகள் 20 நாட்களில் நிறைவு பெறும் என்றார். இனி வரும் காலம் வறட்சி நிலவும் என்பதால் குறைந்த தண்ணீர் செலவில் குறைந்த நாட்களில் அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகப்படுத்தப்படுமா? என கேட்டதற்கு, எல் நினோ காலம் என்பதால் வறட்சி அதிகம் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் தரும் குறுகிய கால பயிர்களை அந்தந்த பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யலாம். உற்பத்தி பொருட்களை அரசு சந்தைப்படுத்தும் என்றார் .

மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் கர்நாடக செல்வதாக நேற்று முன் தினம் வேளாண் துறை அமைச்சர் வினோத் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நேற்று அமைச்சர் ராஜ்மோகன் தமிழக முதல்வர் கர்நாடகம் செல்வது குறித்து அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும் என்றார் . இதுதொடர்பாக அமைச்சர் வினோத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, தமிழக முதல்வர் கர்நாடகம் செல்வது குறித்து தலைமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார். நேற்று முன் தினம் வேளாண் துறை அமைச்சர் மேகேதாட்டு அணை தொடர்பாக ஆகஸ்ட் 3ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் தமிழக முதல்வர் கலந்து கொள்வதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் கர்நாடகம் பயணம் குறித்து தலைமை அறிவிக்கும் என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.