தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பொறுப்பற்ற கருத்துகள்.. மெஹபூபா மன்னிப்பு கோர வேண்டும்: ஒமர் அப்துல்லா!

காஷ்மிரிகள் மீதான வன்முறைப் பயன்பாட்டை நியாயப்படுத்த வேண்டாம் என முதல்வர் கூறியது பற்றி.

News image

ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி

Updated On :27 ஜூலை 2026, 3:19 pm IST

பிடிபி தலைவர் மெஹயூபா முஃப்தி ஜந்தர் மந்தருக்குச் சென்று காஷ்மிரிகள் மீதான வன்முறைப் பயன்பாட்டை நியாயப்படுத்த வேண்டாம், அவரது கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய ஒமர் அப்துல்லா...

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மெஹபூபா ஜூலை 23 அன்று ஜந்தர் மந்தருக்குச் சென்றிருந்தார்.

தில்லியில் இளைஞர்கள் மீதான காவல் துறை நடவடிக்கையை எதிர்த்த அதே வேளையில், காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பாதுகாப்புப் படைகள் போராடுவதால் அங்கு நிலைமை வேறுபட்டது, பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த காலங்களில் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதை பிடிபி தலைவர் நியாயப்படுத்துவது போல் பேசினார்.

இக்கருத்துகள் ஒமர் அப்துல்லாவின் நேஷனல் கான்பரன்ஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட காஷ்மீரில் வன்முறைப் பயன்பாடு நியாயமானது என்று முன்னாள் முதல்வர் கூறும்போது, ​​தங்கள் உரிமைகளுக்காகப் போராட யார் முன்வருவார்கள்? அவர் ஜந்தர் மந்தருக்குச் செல்லாமல் இருந்திருக்கலாம்.

மத்திய அரசின் ஒடுக்குமுறை, வன்முறைப் பயன்பாட்டை நாங்கள் (அரசியல்வாதிகள்) ஆதரிக்கும்போது, ​​மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக மக்கள் போராட விரும்பினால் யார் எங்களை ஆதரிப்பார்கள்? இது ஏற்றுக்கொள்ளத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்குமாறு நேஷனல் கான்பரன்ஸ் நடத்திய போராட்டத்திற்கு மெஹபூபா ஜந்தர் மந்தருக்குச் செல்லவில்லை, ஆனால், இளைஞர்களின் போராட்டத்திற்காக அங்குச் சென்றுள்ளார்.

தில்லியிலும் சொந்த மாநிலத்திலும் வெவ்வேறு விதமாகப் பேசும் பழைய பழக்கம் பிடிபி தலைவருக்கு உண்டு. மெஹ்பூபா தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அப்துல்லா கூறினார்.

இருப்பினும், ஜந்தர் மந்தரில் மெஹபூபா ஆற்றிய உரையைத் திரித்துக் காட்டுவதற்கு ஆளும் கட்சியான நேஷனல் கான்பரன்ஸ் செய்யறிவை (AI) பயன்படுத்தியதாக பிடிபி குற்றம் சாட்டியது.

Jammu and Kashmir Chief Minister Omar Abdullah on Monday said PDP president Mehbooba Mufti should have stayed home instead of going to Jantar Mantar and justifying the use of force against Kashmiris, and that she should apologise for her remarks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.