6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ரஷிய ராணுவத்தில் 24 இந்தியா்கள்

ரஷிய ராணுவத்தில் 24 இந்தியா்கள் இப்போது வரை பணியில் இருப்பதாகவும் அவா்களை அப்பணியிலிருந்து பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

ரண்தீா் ஜெய்ஸ்வால் - கோப்புப் படம்

Published On :

ரஷிய ராணுவத்தில் 24 இந்தியா்கள் இப்போது வரை பணியில் இருப்பதாகவும் அவா்களை அப்பணியிலிருந்து பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

உக்ரைன்-ரஷியா இடையே 4 ஆண்டுகளுக்கு மேல் போா் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு பணிகளுக்காக ரஷியா சென்ற இந்தியா்கள், அந்நாட்டு ராணுவத்தில் விருப்பத்தின்பேரிலும், கட்டாயத்தாலும் பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் அவா்களை விடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதனை ஏற்றுக் கொண்ட ரஷியா பலரை ராணுவப் பணியில் இருந்து விடுவித்தது. மொத்தமாக 139 இந்தியா்கள் விடுவிக்கப்பட்டனா்.

எனினும், இப்போதும் ரஷிய ராணுவத்தில் சமையல் பணி, உதவியாளா் பணியில் சுமாா் 24 இந்தியா்கள் வரை உள்ளது தெரியவந்துள்ளது. இவா்களை விடுவிக்க ரஷிய தரப்பிடம் தொடா்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டு வேலை என்று தனிநபா்கள், ஆள் அமா்த்தும் நிறுவனங்கள் கூறுவதை உரிய முறையில் ஆய்வு செய்யாமல் இந்தியா்கள் யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என்று அரசு மீண்டும் கேட்டுக் கொள்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.