FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பெண் பொறியியல் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் அதிகாரிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ராணுவத்தில் 'லெப்டினன்ட்' பணிக்கு பெண் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிப்பது குறித்து...

News image

இந்திய ராணுவத்தில் 'லெப்டினன்ட்' பணி - கோப்புப்படம்

Updated On :30 ஜூலை 2026, 11:55 pm IST

இந்திய ராணுவம், பெண்களுக்கான 67-ஆவது 'எஸ்எஸ்சி' (தொழில்நுட்பப் பிரிவு ஏப்ரல் -2027) பயிற்சி வகுப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்எஸ்சி தொழில்நுட்பப் பிரிவு நுழைவுத் தேர்வு மூலம் இந்திய ராணுவத்தில் 'லெப்டினன்ட்' பணியில் சேர விரும்பும் பெண் பொறியியல் பட்டதாரிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள திருமணமாகாத இந்திய பெண்களிடமிருந்து அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

பணி: Lieutenant (68th - SSC/Technical /Women APR - 2027)

காலியிடங்கள்: 31

பொறியியல் துறையில் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

சிவில் - 7, கணினி அறிவியல் - 4, எலக்ட்ரிக்கல் - 3, எலக்ட்ரானிக்ஸ் - 6, மெக்கானிக்கல் - 9, பொறியியல் இல்லாத துறை - 2

வயது வரம்பு: 1.4.2027 தேதியின்படி 20 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100 -1,77,500

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ஏவியானிக்ஸ், ஏரோநாட்டிக்கல், விண்வெளிப் பொறியியல், கருவியியல், கணினித் தொழில்நுட்பம், கட்டுமானப் பொறியியல், புவிசார் தகவல் தொழில்நுட்பம், கிராமப்புற சிவில் பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், நானோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுப் பொறியியல், இயந்திரக் கற்றல், தானியக்கம் மற்றும் ரோபோட்டிக்ஸ், மென்பொருள் பொறியியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

உடற்தகுதி: 2.4 கி.மீ.தூரத்தை 13 நிமிடங்கள் 30 வினாடிக்குள் ஓடி முடிக்க வேண்டும். புஷ் அப்ஸ் 15, சிட் அப்ஸ் 25, புல் அப்ஸ் 2 மேலும் ஸ்க்வாட்ஸ், லஞ்சஸ், நீச்சல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், எஸ்எஸ்பி -ஆல் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும்.

டெக்ராடூனிலுள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2027-ல் பயிற்சி ஆரம்பமாகும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.Joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும். நேர்முகத் தேர்வு தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் தெரி விக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.8.2026

Summary

The Indian Army has officially released the notification for the 68th Short Service Commission (Technical) Course April 2027 for Women.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.