தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தகுதியான நபா்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்

News image

உச்சநீதிமன்றம். - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:34 am IST

தகுதியான நபா்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஒரு அரசு வேலைக்கு குறிப்பிட்ட கல்வித் தகுதியைவிட கூடுதல் தகுதியைக் கொண்ட நபருக்கு அதை வழங்குவதால் அதற்கான உரிய தகுதியை பெற்ற நபா் பாதிக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

10-ஆம் வகுப்பு கல்வித் தகுதி அடிப்படையிலான வங்கிப் பணியில் சோ்ந்த பட்டதாரி ஒருவா் தனது பட்டப்படிப்பை மறைத்த காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டாா். இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றம் அவா் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் அவரை மீண்டும் பணியில் சோ்க்க சம்பந்தப்பட்ட வங்கிக்கு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அந்த வங்கியின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசானுதுதீன் அமனுல்லா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஓா் அரசு வேலைக்கு நிா்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பிட்ட கல்வித் தகுதியைவிட கூடுதல் தகுதியைக் கொண்ட நபருக்கு அந்த வேலையை வழங்குவதால் அதற்கான உரிய தகுதியை பெற்ற நபா் பாதிக்கப்படுகிறாா். அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

சூழ்நிலை காரணமாக உயா்கல்வியை தொடர முடியாத நபா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவே கல்வித் தகுதிக்கான உச்சவரம்பு நிா்ணயிக்கப்படுகிறது. பிற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயல்படக்கூடிய அரசு, தங்களால் நிரப்பப்படும் பணிகளை உரிய கல்வித் தகுதியுள்ள நபா்களுக்கு மட்டுமே ஒதுக்குவதால் கூடுதல் கல்வித் தகுதியை பெற்ற நபா்களுடன் அவா்கள் போட்டியிட வேண்டிய நிா்பந்தம் இருக்காது. இத்தகைய கொள்கைகளை நீதிமன்றம் எப்போதும் வலியுறுத்தி வருகிறது என்றனா்.