நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நார்வேயில் நடைபெற்ற புகழ்பெற்ற செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, அந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.
இதற்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நார்வே செஸ் 2026 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றதோடு, இதில் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
இந்த மகத்தான சாதனை, அவருடைய அபாரத் திறமை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பல ஆண்டுகால உழைப்புக்குக் கிடைத்த வெற்றி ஆகும். உலகளாவிய போட்டிகளில் அவரின் செயல்பாடு நாட்டுக்கு மிகப்பெரிய பெருமையைச் சேர்த்ததோடு, வளர்ந்து வரும் இளம் செஸ் வீரர்களுக்கு புது உத்வேகத்தையும் அளிக்கிறது. தொடர் வெற்றிகள் மூலம், செஸ் உலகில் அவர் மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள் என்று சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
Heartiest congratulations to the outstanding young Grandmaster, R. Praggnanandhaa, on winning the Norway Chess 2026 title and becoming the first Indian to achieve this remarkable feat.
— Vice-President of India (@VPIndia) June 6, 2026
This remarkable achievement is a testament to his exceptional talent, unwavering dedication,⦠pic.twitter.com/L3nybfdqVg
Summary
Vice President C.P. Radhakrishnan congratulated Tamil Nadu player Praggnanandhaa on Saturday for winning the championship title at the Norway Chess tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










