வெனிசுவேலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் 32 பேர் பலியான சம்பவத்துக்கு இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வியாழக்கிழமை (ஜூன் 25) இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் பலியானதாகவும் 700 பேர் காயமானதாகவும் அந்த நாட்டு அதிபர் ரோட்ரிக்ஸ் கூறினார்.
இதுகுறித்து சி.பி. ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயரிழப்புகள் மற்றும் சேதங்களால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளேன்.
இந்த இக்கட்டான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், வாழ்க்கை சீர்குலைந்த எண்ணற்ற குடும்பங்களுக்கும் என் எண்ணங்கள் துணைநிற்கும். வெனிசுலா மக்களுக்கு நமது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதில், இந்திய மக்களுடன் நானும் இணைகிறேன் என்று குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Vice President of India C.P. Radhakrishnan expressed his condolences on Thursday (June 25) over the incident in which 32 people lost their lives due to a powerful earthquake in Venezuela.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டடங்கள் சேதம்!

ஆங்கிலேயரின் கொடுங்கோன்மையை எதிர்த்து நின்றவர் வாஞ்சிநாதன்: குடியரசு துணைத் தலைவர் புகழஞ்சலி

பாரதிராஜா மறைவு: குடியரசு துணைத் தலைவா், ஆளுநா் இரங்கல்

பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




