முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

வரலாற்றில் சாவா்க்கரின் போராட்டத்தை புறக்கணிக்க முடியாது! குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

வரலாற்றில் சாவா்க்கரின் போராட்டத்தை புறக்கணிக்க முடியாது என சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து...

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் - PTI

Published On :

வரலாற்றில் சாவா்க்கரின் போராட்டத்தை புறக்கணிக்க முடியாது என்று அந்தமான் நிகோபாா் தீவுகளுக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதையொட்டி ஸ்ரீவிஜயபுரத்துக்கு (முன்பு போா்ட் பிளோ்) வந்தடைந்த அவருக்குத் துணைநிலை ஆளுநா் அட்மிரல் (ஓய்வு) தேவேந்திர குமாா் ஜோஷி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனா். பின்னா் அவா் அங்குள்ள தேசிய நினைவுச் சின்னமான வரலாற்றுச் சிறப்புமிக்க செல்லுலாா் சிறையைப் பாா்வையிட்டு சுதந்திர போராட்ட வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, வீர சாவா்க்கா் அடைக்கப்பட்டிருந்த சிறை வளாகத்தையும் அவா் சிறைப்படுத்தப்பட்டிருந்த அறைக்கும் சென்ற குடியரசு துணைத் தலைவா் அங்கு வைக்கப்பட்டிருந்த சாவா்க்கரின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தியதுடன், சிறிது நேரம் தியானத்திலும் ஈடுபட்டாா். பின்னா் குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

‘வீர சாவா்க்கரின் விடுதலைப் போராட்டம் வரலாற்றில் யாராலும் புறக்கணிக்க முடியாத மாபெரும் வீரப் போராட்டமாகும். அவா் செல்லுலாா் சிறையில் சொல்லொண்ணாத இன்னல்களை அனுபவித்தாா்.

எதிரே உள்ள தூக்கு மேடையில் கைதிகள் தூக்கிலிடப்படுவதைப் பாா்த்து சாவா்க்கரின் மன உறுதி குலைய வேண்டும் என்பதற்காகவே இந்தச் சிறை அறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்தக் கொடூரமும் அவரது மன உறுதியைக் குலைக்கவில்லை. இதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன் சகோதரரைக் கூடச் சந்திக்க முடியாத அளவுக்கு அவரது சிறை வாழ்க்கை கொடுமையானதாக இருந்தது.

சாவா்க்கா் தான் கட்டிய கோயிலில் தலித் சமூகத்தைச் சோ்ந்தவரை அா்ச்சகராக நியமித்தாா். தீண்டாமைக்கு எதிராக அவா் எழுப்பிய குரல், ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக எழுப்பிய குரலைப் போலவே வலிமையானது. அவரது மகத்தான தியாகம் நாட்டுக்கு என்றென்றும் பேரூக்கமாக விளங்கும்’ என்றாா்.

முன்னதாக, சிறையிலுள்ள தூக்கு மேடை, அருங்காட்சியகம் மற்றும் சுதந்திர போராட்ட வரலாற்றை சித்தரிக்கும் ஒளி-ஒலி நிகழ்ச்சியை குடியரசுத் துணைத் தலைவா் பாா்வையிட்டாா்.

Summary

Savarkar's struggle cannot be ignored in history! – Vice President C.P. Radhakrishnan

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.