ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

இந்தியா கூட்டணியை கைவிட்ட திமுக: பாஜக விமர்சனம்!

இந்தியா கூட்டணியை திமுக கைவிட்டுவிட்டது என்று பாஜக விமர்சித்தது பற்றி...

Shehzad Poonawalla

ஷெஸாத் பூனாவாலா - கோப்புப் படம்

Updated On :

இந்தியா கூட்டணியை திமுக கைவிட்டுவிட்டது என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்றதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அந்தத் தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுகவிலிருந்து பிரிந்து தவெகவுடன் இணைந்தது.

அதுமட்டுமல்லாமல், இனி வரும் காலங்களில் அதாவது, உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலிலும் தவெகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் வரும் ஜூன் வரும் 8 ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும்படி, திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சி அறிவித்தது. ஆகையால், இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஷெஸாத் பூனாவாலா பேசியதாவது:

இந்தியா கூட்டணிக்கும் நோக்கம், தொலைநோக்குப் பார்வை என்ற எதுவும் இல்லை. கூட்டணியில் குழப்பம் மட்டுமே உள்ளது. கூட்டணியில் நாளுக்கு நாள் பிரிவினைகள் உருவாகி வருகிறது. இந்தியா கூட்டணியை திமுக கைவிட்டுவிட்டது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் (என்சிபி (எஸ்பி)) கட்சியும் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியும் மாநிலங்களவை இடத்துக்காக காங்கிரஸுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது.

எங்கள் (பாஜக) தலைவர்களுக்கு எதிராக ராகுல் காந்தி கூறிய கருத்துகளுக்கு விளக்கம் அளிக்குமாறு மல்லிகார்ஜுன கார்கே-க்கு இடதுசாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். எனவே, அவர்கள் ஒற்றுமையாக இல்லை என்பதும், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இந்தக் கூட்டணி வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது; அது ஒரு கற்பனை என்று தெரிவித்தார் ஷெஸாத் பூனாவாலா

Summary

BJP national spokesperson Shehzad Poonawalla stated on Sunday that the DMK has abandoned the INDIA alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.