சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இல்லத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் இல்லத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது பற்றி...

News image

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே - படம் - பிடிஐ

Updated On :7 ஜூன் 2026, 1:04 pm IST

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே இல்லத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்டது கரப்பான்பூச்சி மக்கள் கட்சி. அண்மையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி, போராட்டத்தில் பங்கேற்பதற்பதற்காக அமெரிக்காவிலிருந்து நேற்று இந்தியா வந்தடைந்த அபிஜீத் தீப்கே தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் ஆதரவோடு போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில், அபிஜீத் தீப்கே இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பை தில்லி காவல்துறை வழங்கியுள்ளது. இது குறித்து காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது:

இன்று முதல் அபிஜீத் தீப்கே இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு, 11 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது 15 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பணியமர்த்தப்பட்ட காவலர்கள் உள்ளூர் காவல் நிலையம் மற்றும் நகர காவல் தலைமையகம் ஆகிய இரண்டையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

Summary

Officials stated on Sunday that security arrangements at the residence of 'Cockroach Janata Party' leader Abhijiit Dipke have been stepped up.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.