மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

5,000-க்கும் மேற்பட்ட இந்திய சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இணையவழி மோசடி! அமலாக்கத்துறை விசாரணை

சைபர் மோசடி குற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட 5,300 இந்திய சிம் கார்டுகள்...

News image

IANS

Updated On :8 ஜூன் 2026, 9:10 pm IST

புது தில்லி : 5,000-க்கும் மேற்பட்ட இந்திய சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இணையவழி மோசடிகள் நடைபெற்ற சைபர் குற்ற வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் வாங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சிம் கார்டுகள் கம்போடியாவில் இருந்து செயல்படும் மலேசியாவைச் சேர்ந்தவொரு மோசடி கும்பலால் இந்தியாவில் பல்வேறு இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாம். இந்தியாவிலுள்ள சில முகவர்கள் இந்திய சிம் கார்டுகளை கம்போடியாவில் இயங்கும் கும்பலுக்கு மலேசிய நாட்டவர் ஒருவர் மூலம் அனுப்பி வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்தக் கும்பல் இந்தியாவில் பல தரப்பு மக்களிடம் நூறுகளில் செலுத்தும் ரூபாய்க்கு கோடிகளில் பணம் திருப்பி வழங்குவதாக வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக, ராஜஸ்தானில் 7 இடங்களிலும் பஞ்சாபிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், உள்ளூர் வங்கிகளில் 30 வங்கிக் கணக்குகள் தொடங்கி சைபர் மோசடிக்கு அந்தக் கும்பல் பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

சைபர் மோசடி வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை ஆய்வுக்குட்படுத்திய 2.3 லட்சம் சிம் கார்டுகளில் ஏறத்தாழ 36,000 சிம் கார்டுகள் கம்போடியாவில் இருந்து செயல்பட்டதும் அவற்றில் 5,300 சிம் கார்டுகள் இந்தியாவெங்கிலும் இணையவழி மோசடிகளுக்காக வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் பயன்படுத்தப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.

Summary

The Enforcement Directorate has started probing a case involving the alleged purchase of 5,300 SIM cards in the country, which were used in Cambodia by a Malaysian national-led gang to perpetrate cyber frauds across India, duping people for hundreds of crores of rupees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.