திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களில் 20 பேர் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மக்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவையில் பாஜக வெற்றிபெற்று, 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மமதா பானர்ஜி அதிருப்தியடைந்த திரிணமூல் எம்எல்ஏ-க்கள் 58 பேர், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அணி திரண்டனர். அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் ரிதப்ரதா பானர்ஜி கைப்பற்றினார்.
இந்த நிலையில், கட்சிக்குள் நிலவும் பூசல் காரணமாக, திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் சிலர் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணையவிருப்பதாக திரிணமூல் எம்.பி. ககோலி கோஷ் தஸ்திதார் கூறியிருப்பது மாநில அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளருடன் ககோலி கோஷ் தஸ்திதார் எம்.பி. பேசியதாவது, நான் உள்பட 20 எம்.பி.க்கள் தனி அணியாகச் செயல்படுவதுடன், தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பதாகவும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மேற்கு வங்க மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸில் தற்போது 28 மக்களவை எம்.பி.க்கள் உள்ள நிலையில், 20 எம்.பி.க்கள் தனி அணியாகச் செயல்பட முடிவெடுத்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் தனி அணியாகச் செயல்பட முடியும் என்பதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது.
Summary
Trinamool Congress rebellion reaches Delhi: 20 party MPs plan to form a separate bloc and support NDA
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் தில்லியில் ஆலோசனை!

மக்களவையிலும் உடைகிறதா மமதாவின் திரிணமூல் காங்.?

திரிணமூல் காங்கிரஸின் அனைத்து அமைப்புகளும் கலைப்பு!

திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




