2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்து நொறுங்கிய பாக். ராணுவ ஹெலிகாப்டர்! பயணிகள் அனைவரும் பலி!

பாகிஸ்தான் ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்து நொறுங்கியது குறித்து...

Pakistani Army helicopter crashes in PoK

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர்... - எக்ஸ்

Published On :

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், அந்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று (ஜூன் 10) பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களில் முசாபர்பாத் அருகே தொழில்நுட்பக் கோளாறால் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக, பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த யாரும் உயிர்ப் பிழைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, விபத்து நடைபெற்ற பகுதிக்கு உடனடியாக விரைந்த மீட்புப் படையினர் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்துடன், இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவராத நிலையில், தனிக்குழுக்கள் அமைத்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

Summary

Pakistan Army helicopter crashed in Pakistan-occupied Kashmir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.