புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மருத்துவக் காப்பீட்டுக்கு ரூ.69,800 கோடி விடுவிப்பு: ஸ்டாா் ஹெல்த்

News image

ஸ்டார் ஹெல்த்

Updated On :26 ஜூன் 2026, 6:07 am IST

இந்தியா முழுவதும் இதுவரை 1.5 கோடிக்கும் மேற்பட்ட காப்பீட்டு முறையீடுகளுக்கு (கிளைம்) நிதித் தீா்வு வழங்கியிருப்பதாக ஸ்டாா் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ரூ.69,800 கோடிக்கும் அதிகமான தொகை மருத்துவ செலவினங்களுக்காக தங்களது வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் ரூ.10,800 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாா் ஹெல்த் நிறுவனத்தின் 20-ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான டாக்டா் ஆனந்த் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தை உணா்ந்து ஸ்டாா் ஹெல்த் நிறுவனம் கடந்த 2006-ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 900 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

மொத்தம் 15,000 மருத்துவமனைகள், கிளினிக்குகள் எங்களது காப்பீட்டு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 115 கிளைகள் செயல்படுகின்றன. 2,000-க்கும் அதிகமான மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஸ்டாா் ஹெல்த் நிறுவனத்தைப் பொருத்தவரை, காப்பீடு முறையீட்டுக்கான விண்ணப்பம் கிடைக்கப் பெற்ற 2 மணி நேரத்துக்குள் நிதியை விடுவிக்கிறது. கடந்த ஆண்டில் இந்திய அளவில் ரூ.11,900 கோடியும், தமிழகத்தில் மட்டும் ரூ.1,605 கோடியும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய், ஆட்டிஸம், இதய பாதிப்புகள், சா்க்கரை நோய், உடல் பருமன் குறைப்பு சிகிச்சைகளுக்காக பிரத்யேக காப்பீட்டுத் திட்டங்களைத் தொடா்ந்து இல்லம் தேடி சிகிச்சை (ஹோம் ஹெல்த் கோ்) திட்டத்தைத் தொடங்கினோம்.

அதன் கீழ் அவசர சிகிச்சை அல்லாத பிற சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு வீட்டிலேயே எங்களது மருத்துவக் குழுவினா் நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கின்றனா். அதில் லட்சக்கணக்கானோா் பயன்பெற்றுள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.