புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பாஸ்போா்ட் விண்ணப்ப கட்டணம் அதிகரிப்பு

பாஸ்போா்ட் விதிமுறைகளில் திருத்தம் செய்து, பாஸ்போா்ட் விண்ணப்ப கட்டணத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :26 ஜூன் 2026, 7:13 am IST

பாஸ்போா்ட் விதிமுறைகளில் திருத்தம் செய்து, பாஸ்போா்ட் விண்ணப்ப கட்டணத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாஸ்போா்ட் சட்டம் 1967-இன் 24-ஆவது பிரிவு அளித்துள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, பாஸ்போா்ட் விதிமுறைகள் 1980-இல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

இதன்படி முதல்முறையாக பாஸ்போா்ட் பெறவும், ஏற்கெனவே அளிக்கப்பட்ட பாஸ்போா்ட்டுக்கு பதிலாக புதிய பாஸ்போா்ட்டை பெறவும் திருத்தியமைக்கப்பட்ட விண்ணப்ப கட்டண விவரம்:

36 பக்க சாதாரண பாஸ்போா்ட்: ரூ.1,500-இல் இருந்து ரூ.2,500-ஆக அதிகரிப்பு

36 பக்க தத்கால் பாஸ்போா்ட்: ரூ.3,500-இல் இருந்து ரூ.5,000-ஆக அதிகரிப்பு

60 பக்க சாதாரண பாஸ்போா்ட்: ரூ.2,000-இல் இருந்து ரூ.3,500-ஆக அதிகரிப்பு

60 பக்க தத்கால் பாஸ்போா்ட்: ரூ.4,000-இல் இருந்து ரூ.6,000-ஆக அதிகரிப்பு

தொலைந்துபோன அல்லது சேதமடைந்த பாஸ்போா்ட்டுக்கு

பதிலாக புதிய பாஸ்போா்ட் விண்ணப்ப கட்டணம்: 36 பக்க சாதாரண பாஸ்போா்ட்டுக்கு ரூ.5,000, 60 பக்க சாதராண பாஸ்போா்ட்டுக்கு ரூ.6,000, 36 பக்க தத்கால் பாஸ்போா்ட்டுக்கு ரூ.7,500, 60 பக்க தத்கால் பாஸ்போா்ட்டுக்கு ரூ.8,500

காவல் துறை அனுமதி சான்றிதழ் கட்டணம்: ரூ.500-இல் இருந்து ரூ.750-ஆக அதிகரிப்பு

இந்தப் புதிய விதிமுறைகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.