ஜார்க்கண்டில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது மின்னல் பாய்ந்து 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த 2 பேர் மின்னல் பாய்ந்து பலியானதாக போலீஸ் அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பலியானவர்கள் சஹில் ராஜ் சமத் (32) மற்றும் பொண்டேராம் சமத் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உடனே அவர்கள் அருகிலுள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பலியாகிவிட்டதாக அறிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், புதன்கிழமை மாலை டோக்லோ பகுதியில் மின்னலுடன் கூடிய மழை பெய்தபோது, இளைஞர்கள் சிலர் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது இந்த இருவரும் மின்னலால் தாக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள பள்ளி வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் குச்சாயில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
அங்கு மருத்துவர்கள் இருவரும் பலியாகிவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததை உறுதி செய்த டோக்லோ காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அன்கித் குமார், இதுகுறித்து அவர்களின் குடும்பத்தினரால் இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
Summary
Two persons playing football were killed when lightning struck them in Jharkhand's West Singhbhum district, a police officer said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









