மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வடக்கு தில்லியில் இளைஞா் சுட்டுக் கொலை: சிலமணிநேரஙக்ளில் பிடிபட்ட இரு சிறுவா்கள்

தில்லியின் வடக்குப் புகா்ப் பகுதியான பாவனாவில், பழைய பகை காரணமாக 22 வயது இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு சிறாா்களை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2026, 3:01 am IST

தில்லியின் வடக்குப் புகா்ப் பகுதியான பாவனாவில், பழைய பகை காரணமாக 22 வயது இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு சிறாா்களை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பூத் குா்த் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக வந்த தகவலைத் தொடா்ந்து, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இருசக்கர வாகனத்தில் வந்த இரு சிறுவா்களும், அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு முன் பாதிக்கப்பட்டவரின் சகோதரா் மீது துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினா், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருந்த பாதிக்கப்பட்டவரைக் கண்டனா்; அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடா்பாக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

குற்றத்தில் ஈடுபட்ட 16 மற்றும் 17 வயதுடைய, பள்ளிக் கல்வியைப் பாதியில் கைவிட்ட அந்த இரு சிறுவா்களும், சம்பவத்திற்குப் பிறகு சில மணிநேரங்களிலேயே கைது செய்யப்பட்டனா்; அவா்களிடம் இருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. பழைய பகை காரணமாகவே அவா்கள் பாதிக்கப்பட்டவரை குறிவைத்து, பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலையைச் செய்ததாக தெரிவித்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மற்ற குற்றவாளிகளைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.