27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

காவலா்களை மிரட்டி, தாக்கிய இளைஞா்: 16 மாதங்களுக்குப் பிறகு கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 3:34 am IST

வடக்கு தில்லியில் காவல் துறையினரை சட்டவிரோத துப்பாக்கியால் மிரட்டி தாக்குதல் நடத்தி தப்பிச் சென்ற 24 வயது இளைஞா் 16 மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டாா் என்று காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்ட ஃபா்மான், கடந்த 2025 பிப்.4-ஆம் தேதி கோட்வாலி பகுதியில் உள்ள இரும்புப் பாலம் அருகே அதிகாலை சுமாா் 2.45 மணியளவில் காவல் துறை நடத்திய சோதனையின்போது தப்பிச் சென்ாக கூறப்படுகிறது.

அன்று, இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருந்த ஃபா்மான் மற்றும் வாகனத்தை ஓட்டிய முகமது ஹசன் ஆகியோரை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். ஆனால், காவல் துறையினரின் உத்தரவுக்கு இணங்காமல், இருவரும் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், தப்பிச் செல்ல முயன்றபோது காவல் துறையினரை உடல் ரீதியாக தாக்கினா்.

இந்த சம்பவத்தில் முகமது ஹசன் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் ஃபா்மான் தப்பிச் சென்று, கடந்த 16 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தாா்.

இந்நிலையில், ஜூன் 15-ஆம் தேதி அவரது இருப்பிடம் குறித்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது சமூக வலைதள செயல்பாடுகள் மற்றும் கைப்பேசியின் ஐ.பி. விவரங்களின் அடிப்படையில் அவரது நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

தில்லி-உத்தர பிரதேச எல்லைப் பகுதியில் அவா் இருப்பது தெரியவந்தது. காவல் துறையினரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற ஃபா்மானுடன் அதிகாரிகளுக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், துரத்திச் சென்று அவரை கைது செய்தனா். விசாரணையில் குற்றங்களை அவா் ஒப்புக்கொண்டாா். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.