உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் உள்பட காங்கிரஸ் குழுவினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. இதுதொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் மற்றும் அவரது குழுவினரைக் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அஜய் ராய் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
அயோத்தி ராமரை தரிசனம் செய்யக் காங்கிரஸ் குழுவினர் திட்டமிட்டிருந்தனர். நன்கொடை விவகாரத்தில் சிக்கியுள்ள பாஜக அரசு, தன்னையும், எனது குழுவினரையும் கோயிலுக்குச் செல்லவிடாமல் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில் தான் தங்கியிருந்த உணவகத்திலிருந்து ஆச்சார்யா நரேந்திர தேவ் பல்கலைக்கழகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ராய் கூறினார்.
நன்கொடைகளைத் திருடும் பாஜக அரசுக்கு ஸ்ரீ ராமரின் பக்தர்கள் மீது ஏன் இவ்வளவு பயம்? பாஜக, ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஸ்ரீ ராமரின் ஆசி எங்களுக்கு எப்போதும் உண்டு. உங்கள் தந்திரங்களால் எங்களைத் தடுத்த நிறுத்த முடியாது.
இறைவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். இங்கே நிகழ்த்தப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் கொடுமைக்கும் கணக்குத் தீர்க்கப்படும். ராமரின் தரிசனம் கிடைக்காமல் நாங்கள் பின்வாங்க மாட்டோம். சிறைக்குச் செல்ல நேரிட்டாலும் சரி, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தாலும் சரி எனத் தெரிவித்தார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Uttar Pradesh Congress chief Ajay Rai on Tuesday claimed he has been placed under "house arrest" here and would not leave the temple town until allowed to offer prayers at the Ram temple.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி நன்கொடை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: மாயாவதி எச்சரிக்கை!

ராமர் கோவில் நிதி முறைகேடு வழக்கு: குற்றவாளியின் வீட்டில் நகை, ஆவணங்கள் பறிமுதல்!
நன்கொடை முறைகேட்டில் குற்றவாளிகள் தப்ப முடியாது: யோகி ஆதித்யநாத்!






