சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!

எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியாவைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.

News image
ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்- ANI
Updated On :2 மார்ச் 2026, 12:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.

வெடிகுண்டுகள் உள்பட பல்வேறு வெடி பொருட்களுடன் ஓமன் கடற்பரப்பில் தலைநகர் மஸ்கட் அருகே சென்ற ஆளில்லா சிறிய ரக படகு ஒன்று மார்ஷல் தீவுகளின் எண்னெய் கப்பல் மீது மோதி பலத்த சேதத்தை விளைவித்ததில், அக்கப்பலில் பனியாற்றிய இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே நடத்தப்பட்ட தாக்குதல் இது என்று சந்தேகிக்கப்படுகிறது.

கமேனி கொலைக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இத்தாக்குதலில் ஈரானுக்குத் தொடர்பிருக்கலாம் என்றும் ஓமன் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

summary

An Indian crew member was killed after an oil tanker was struck by an unmanned drone boat off the coast of Oman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.