ஊடகங்கள் பிரிவினைக் குரல்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுப்பதாக பிகார் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாவது நாளில், பிகார் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:
"பிரிவினையை நம்பி வளரும் ஒருசில அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர். ஊடகங்கள் பிரிவினைக் குரல்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
நாட்டில் விவாகரத்து பெறாமலேயே பெண்களை அவர்களின் கணவர்கள் கைவிடுவதை தடுக்க சிஆர்பிசியில் மூன்று திருத்தங்கள் செய்யப்பட்டது. இதனால், 1973 ஆம் ஆண்டு அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் திருத்தத்தைக் கொண்டு வந்தது. ஆனால், இந்த திருத்தத்துக்கு பின்பும் அதையே வழக்கமாக கொண்டனர். திருத்தத்தை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை.
விவாகரத்து பெற்ற பெண்களின் பராமரிப்பு செலவை கணவர் ஏற்க வேண்டும். யாராவது பெற்றோரை விட்டுச் சென்றாலும் இது பொருந்தும். மனைவி உயிரிழந்த பிறகு மறுமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கும் இது பொருந்தும். ஆனால், மனைவியைக் கைவிடாமலேயே சிலர் வேறொருவரை திருமணம் செய்கிறார்கள்.
1986 ஆம் ஆண்டு இருந்ததை விட தற்போது தாராளவாத மதகுருமார்கள், முஸ்லிம் தலைவர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் இன்னும் தலைமைக்கு எதிராக வெளிப்படையாகப் பேசத்தொடங்கவில்லை" எனத் தெரிவித்தார்.
summary
Bihar Governor Arif mohammed Khan in ThinkEdu Conclave 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு நிறைவு!

பள்ளி, கல்லூரிகளில் குடிமைப் பணி விழிப்புணர்வு தேவை: அண்ணாமலை
வசனம் பேசிய ரஜினி, பாடிக் காட்டிய யேசுதாஸ்! மேற்கு வங்க ஆளுநர் ருசிகரத் தகவல்!
ரூ.7.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் மீட்பு-கணவன் மனைவி உள்பட 3 போ் கைது
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...


