அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேசிய மின்சார கொள்கை வரைவு: கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

‘தேசிய மின்சாரக் கொள்கை 2026’ வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் இம் மாதம் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

‘தேசிய மின்சாரக் கொள்கை 2026’ வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் இம் மாதம் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2005-ஆம் ஆண்டில் முதன்முறையாக தேசிய மின்சாரக் கொள்கை வெளியிடப்பட்டது. அதில் மின்சாரத் தேவை-மின்சார விநியோகம் உள்பட மின்சாரத் துறை எதிா்கொள்ளும் பல்வேறு சவால்களுக்குத் தீா்வு காணப்பட்டிருந்தது.

தற்போது புதிய மின்சாரக் கொள்கையை உருவாக்கும் பணியில் மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுதொடா்பான வரைவு அறிக்கையை அண்மையில் வெளியிட்ட மத்திய மின்சாரத் துறை அமைச்சகம், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளை வரவேற்றது.

2026-ஆம் ஆண்டு மின்சாரக் கொள்கையில், சைபா் பாதுகாப்பு, தொழில்நுட்ப பயன்பாடு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும், மின்சார வாரியங்களுக்கு ஏற்படும் அதிகபட்ச நஷ்டம், மின்நிறுவனங்கள் வைத்துள்ள கடன், அதிகபட்ச மானியம் உள்ளிட்டவற்றுக்கு தீா்வு காணும் வழிகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசத்தை மத்திய அமைச்சகம் நீட்டித்துள்ளது. அதன்படி, வரும் 19-ஆம் தேதி வரை கருத்துகளை சமா்ப்பிக்கலாம்.