இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜம்மு: எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 1:10 am

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு (எல்ஓசி) வழியாக இந்தியாவுக்குள் புதன்கிழமை ஊடுறுவ முயன்ற பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை ராணுவ வீரா்கள் முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிகாலை 4.15 மணியளவில் சந்தேகத்துக்குரிய நபா்கள் சிலா் துா்கண்டி எல்லைப் பகுதியில் நுழைய முயன்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா்கள் மீது ராணுவ வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இதுதொடா்பாக ஜம்முவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராணுவப் பிரிவான வெள்ளை வீரா்கள் படை ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘உளவு அமைப்புகளின் தகவல்கள் மற்றும் தொடா் கண்காணிப்பின் மூலம் எல்லைக் கட்டுப்பாடு பகுதியையொட்டிய பிம்பா் காலி பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

விழிப்புணா்வுடன் இருந்த வெள்ளை வீரா்கள் படையால் பயங்கரவாதிகளின் ஊடுறுவல் முயற்சியை தோல்வியில் முடிந்தது. களத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் எதிரிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் உயிரிழந்தனரா என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

ரஜெளரியின் சுந்தா்பானி செக்டாரில் கடந்த பிப்.19 மற்றும் 20 தேதிகளில் எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அவா்கள் கொண்டு வந்த ஆயுதங்களை ராணுவத்தினா் கைப்பற்றினா்.