கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இந்தியா வந்த முதல் எண்ணெய்க் கப்பல்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தது எப்படி?

மும்பை வந்தடைந்த முதல் எண்ணெய்க் கப்பல் பற்றி...

strait of hormuz

கோப்புப்படம் - AP

Published On :

ஈரான் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக செளதி அரேபியாவில் இருந்து மும்பை துறைமுகத்துக்கு எண்ணெய்க் கப்பல் வந்தடைந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், இந்திய கேப்டன் தலைமையிலான குழு இயக்கிய லைபீரிய நாட்டுக் கொடி கொண்ட எண்ணெய்க் கப்பல் மும்பை துறைமுகத்துக்கு இன்று வந்தடைந்தது.

செளதி அரேபியாவின் ராஸ் தனுரா துறைமுகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி ஷென்லாங் சூயஸ்மாக்ஸ் என்ற சரக்கு கப்பல் கச்சா எண்ணெய்யை ஏற்றியுள்ளது. இரண்டு நாள்களுக்குப் பின்னர் மும்பை நோக்கிப் பயணத்தை தொடங்கியுள்ளது.

இந்த கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக பாதுகாப்பாக கடந்து புதன்கிழமை மும்பை துறைமுகத்துக்கு வந்துசேர்ந்துள்ளது.

இந்த கப்பலில் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் வந்துள்ளது. கிழக்கு மும்பை, மஹுலில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லப்படவுள்ளன. கேப்டன் சுக்ஷாந்த் சிங் சந்து தலைமையில் 29 இந்திய, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த மலுமிகள் வந்துள்ளனர்.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் மிகுந்த ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது, கப்பலின் சமிக்ஞை, டிரான்ஸ்பாண்டர்கள் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை கப்பல் பணியாளர்கள் அணைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 8 ஆம் தேதி அணைக்கப்பட்ட ரேடார் உள்ளிட்ட கருவிகள், ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்த பிறகு, மார்ச் 10 ஆம் தேதிதான் மீண்டும் ஆன் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த மார்ச் 10, செவ்வாய்க்கிழமை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசியதை தொடர்ந்து, புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இந்திய எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் அனுமதித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இந்த செய்தி உண்மையல்ல என்று என்டிடிவி செய்தி நிறுவனத்துக்கு ஈரான் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

முன்னதாக, துபையிலிருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் மற்றும் பிரிட்டன், ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில், 2 இந்திய மலுமிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

The first oil tanker to arrive in India after the Iran war!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.