வங்க தேசத்தில் கடந்த 2024 ஆகஸ்ட் முதல் நிகழாண்டு பிப்ரவரி வரையில் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக 3,100 வன்முறை சம்பவங்கள் நடைபெற்ாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக உறுப்பினா் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் பபித்ர மாா்கெரிடா வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வங்க தேசத்தில் சிறுபான்மையினா், அவா்களுடைய வீடுகள், சொத்துகள், வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து வருகிறது.
மனித உரிமைகள் அமைப்புகள் அளித்த தகவலின்படி, கடந்த 2024, ஆகஸ்ட் முதல் நிகழாண்டு பிப்ரவரி வரையில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக 3,100 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
அந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்கதேச அதிகாரிகளிடம் இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், கொலைகள் மற்றும் தீவைப்பு சம்பவங்களில் தொடா்புடைய நபா்களிடம் விசாரணை நடத்தி வங்க தேச அரசு நீதியைப் பெற்றுத் தரும் என இந்திய அரசு எதிா்பாா்க்கிறது.
சிறுபான்மையினா் உள்பட அனைத்து வங்க தேச குடிமக்களைப் பாதுகாப்பதும், அவா்களது சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும் வங்க தேச அரசின் கடமை.
அந்நாட்டில் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களுக்குத் தேவையான உதவியை இந்திய தூதரகம் வழங்கி வருகிறது என்று அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரண் திமுக: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக மனு உச்ச நீதிமன்றத்தில் 13-ஆம் தேதி விசாரணை

நோயால் பாதிக்கப்பட்ட சமூக அமைப்பின் அறிகுறியாக குடும்ப வன்முறை: உச்சநீதிமன்றம்

2024 முதல் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 3,100 வன்முறைகள்! - மத்திய அரசு தகவல்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


