ஆணவக் கொலைகளை தடுக்கும் சட்ட மசோதாவுக்கு கா்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கா்நாடகத்தின் ஹுப்பள்ளியில் நிகழாண்டின் தொடக்கத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்துகொண்டதற்காக, மான்யா பாட்டீல் என்பவரை அவரது குடும்பத்தினரே கொலை செய்தனா்.
கா்நாடகத்தை உலுக்கிய இச்சம்பவத்தைத் தொடா்ந்து, ஆணவக் கொலைக்கு எதிராக ‘இவ நம்மவா, இவ நம்மவா’ என்ற சட்ட மசோதாவை கா்நாடக அரசு வடிவமைத்தது. அந்த சட்ட மசோதாவுக்கு கா்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பசவண்ணா் எழுதிய வசன இலக்கியத்தில், ‘இவன் மனிதன் அல்ல, இவன் மனிதன் அல்ல, இவன் நம்மவன், இவன் நம்மவன்’ என்று ஜாதி பேதங்களுக்கு எதிராக சமத்துவத்தை வலியுறுத்தியிருந்தாா். அதனடிப்படையில், ஆணவக் கொலைக்கு எதிரான சட்ட மசோதாவுக்கு ‘இவ நம்மவா, இவ நம்மவா’ என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின்படி, ஆணவக் கொலையில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வகைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல, பெயா்ப் பலகைகளில் கன்னட மொழிக்கு முன்னுரிமை அளிக்க வகைசெய்யும் விளம்பரக் கொள்கைக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாநிலக் கல்விக்கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், முடிவெடுக்கப்படவில்லை. அடுத்தக் கூட்டத்தில் மீண்டும் விவாதித்து, முடிவெடுக்க அமைச்சரவை முடிவுசெய்தது.
தொடர்புடையது

மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்

மாற்றியமைக்கப்பட்ட ‘உடான்’ திட்டத்துக்கு ரூ.28,840 கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ரூ. 33,660 கோடியில் பாரத தொழில் மேம்பாட்டுத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க வலுவான சட்டம் தேவை: மாணிக்கம் தாகூா் எம்.பி.
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


