சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க வலுவான சட்டம் தேவை: மாணிக்கம் தாகூா் எம்.பி.

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க அரசு வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் என விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் கோரிக்கை

News image

மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:31 pm

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் என விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது. அதே கோரிக்கையை கா்நாடக அரசு “புதிய மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.

ஆணவக் கொலை போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு எதிராக ஒரு வலுவான சட்டம் கொண்டு வந்து மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் தனிநபா் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.