உட்கட்சி விவகாரத்தை ஒதுக்கி வைத்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வர உழைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் மூன்று நாள்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் இருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்த இழுபறி இன்று முடிவுக்கு வந்தது.
காங்கிரஸ் போட்டியிடும் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியைத் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கான 27 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் இன்று (ஏப்.3) வெளியிடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னதாக, காங்கிரஸில் சேர்ந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரனுக்கு பென்னகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, காங்கிரஸ் வட்டாரத்தில் சில சலசலப்புகளை உருவாக்கியிருக்கிறது.
இந்த நிலையில், உள்கட்சி விவகாரங்களை ஒரு மாதம் தள்ளி வைத்து விட்டு மற்ற வேலைகளைப் பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மத்திய தேர்தல் குழு என்பது காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த முடிவு எடுக்கும் அமைப்பாகும். பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு, விரிவான விவாதத்தில் பங்கேற்க உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் முன்னிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் விலகினார்.
பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம் நீடிக்கும் நிலையில், தனது விலகல் குறித்து மாணிக்கம் தாகூர் விரைவில் விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடினமாக உழைத்த பல காங்கிரஸ் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு, நமக்கு வெறும் 28 இடங்கள் மட்டுமே உள்ளதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை நாம் அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அறிவிக்கப்பட்ட 27 வேட்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
27 இடங்களிலும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். தமிழ்நாட்டை பின்வாசல் வழியாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைய முயலும் கோட்சேவின் வாரிசுகளிடம் இருந்து காக்க வேண்டிய போராட்டம்.
இந்த நேரத்தில் நாம் நம் உள்கட்சி விவகாரத்தை ஒதுக்கி வைத்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டு உழைக்க வேண்டும்.
அமித் ஷா அதிமுகவை 2019, 2021, 2024 என்று மூன்று முறை தோற்கடித்து போல இந்த முறை மீண்டும் தோற்கடிக்க வேண்டும். வாங்க மற்ற பிரச்னைகளை அடுத்து மாதம் வரை தள்ளி வைப்போம். கடமைக்கு கட்டுப்பட்ட ஒழுக்கமான படைவீரர்களாக, நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிரிகளை எதிர்த்து போராட வேண்டும். நேருவின், அறிஞர் அண்ணாவின் வாரிசுகள் நாம் வீழ்ந்தால் கோட்சேவின் வாரிசுகள் வெற்றி பெறுவார்கள். 200 இடங்களை வெல்லும் இலக்குடன் ஒற்றுமையாக செயல்படுவோம். மீண்டும் வெற்றி பெறுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார் மாணிக்கம் தாகூர்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி விவகாரங்களுக்கு மத்தியில், தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
A Congress MP has stated that, setting aside internal party matters, they must work to return to power under the leadership of Chief Minister Stalin, the leader of the Secular Progressive Alliance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்!

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!

திமுக கூட்டணி தலைவர் கார்கே எடுத்த முடிவு! மாணிக்கம் தாகூர் எம்.பி. சிறப்பு நேர்காணல்

தலைமை எடுக்கும் முடிவு நம் விருப்பத்துக்கேற்ப இல்லாவிட்டாலும் அதனை ஏற்பதே ... மாணிக்கம் தாகூர் பதிவு!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

