பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சகோதரியைக் கொலைசெய்து அம்மாவிடம் 'சர்ப்ரைஸ்' என்று கூறிய மகன்!

உத்தர பிரதேசத்தில் வாழ்க்கையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய சகோதரியை சகோதரன் கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு

UP Man Killed His Twin Sister

கொலை - சித்திரிப்பு

Published On :

உத்தர பிரதேசத்தில் வாழ்க்கையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய சகோதரியை சகோதரன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் மொரதாபாதில் இன்சூரன்ஸ் கம்பெனியில் உதவி மேலாளராகப் பணிபுரியும் நீலிமா என்பவரின் பிள்ளைகளான 25 வயதில் இரட்டையர்கள் ஹர்திக் மற்றும் ஹிமான்சிகா ஆகிய இருவரும் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதனிடையே, கடந்த சில நாள்களாகவே ஹர்திக் வேலையிலும் வாழ்க்கையிலும் கவனம் செலுத்தாமல், சமூக ஊடகங்களில் மட்டுமே அதிகப்படியான நேரத்தைச் செலவழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஹர்திக்கின் இந்தப் போக்கை நீலிமாவும் ஹிமான்சிகாவும் கண்டித்து வந்துள்ளனர்.

மேலும், வேறு மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஹர்திக் காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதியில் நீலிமாவை அவரது நிறுவனத்துக்கே சென்று அழைத்து, வீட்டில் சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக ஹர்திக் கூட்டிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வீட்டுக்கு சென்ற நீலிமா, தனது மகள் ஹிமான்சிகா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

செல்போன் பயன்படுத்துவதை நிறுத்துமாறு தன்னைத் தொடர்ந்து ஹிமான்சிகா கண்டித்ததால், வாக்குவாதம் முற்றி, அவரைக் கொன்றுவிட்டதாக ஹர்திக் கூறியுள்ளார். மேலும், நீலிமாவையும் ஹர்திக் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், ஹர்திக்கை கைது செய்தனர். மேலும், நீலிமாவையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதுமட்டுமின்றி, பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, ஹிமான்சிகாவின் உடலில் 84 வெட்டுக் காயங்கள் இருப்பதாகவும் கூறுகிறது.

Summary

UP Engineer's 'Surprise' For Mother - Sister's Body With 84 Stab Wounds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.