மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரூ.500 லஞ்சம்... 36 ஆண்டுகளுக்குப் பின் காவலரின் தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம்!

ரூ.500 லஞ்சம் பெற்ற காவலரின் தண்டனை 36 ஆண்டுகளுக்குப் பின் உறுதிசெய்யப்பட்டது பற்றி...

News image
- கோப்புப் படம்
Updated On :16 மார்ச் 2026, 1:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ரூ.500 லஞ்சம் பெற்ற காவலரின் தண்டனையை 36 ஆண்டுகளுக்குப் பின் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் ஜூன் 19, 1990 அன்று முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் வழக்கு விசாரணை ஒன்றில் ரூ. 500 லஞ்சம் பெற்றுள்ளார். அவர்மீது அங்குள்ள காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு அடுத்த ஆண்டே மாவட்ட நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் குற்றவாளி என கடந்த 2006 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர் மேல்முறையீடு செய்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 14 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து அவர் மேல்முறையீடு செய்து வந்தார்.

அவர் கடந்த 2013 ஜனவரி முதல் ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் நிராகரித்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், பி பி ராலே அடங்கிய அமர்வு கடந்த வெள்ளி (மார்ச் 13) அன்று விசாரித்தது.

பின்னர் வெளியான உத்தரவில், ”விசாரணை நீதிமன்றத்தின் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிசெய்ததில் எந்தப் பிழையும் இல்லை. குற்றவாளிக்கு தற்போது 75 வயதாகியுள்ளது. அவர் ஏற்கனவே இரு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.

எனவே, மேற்கூறிய குற்றத்திற்கான தண்டனையை மாற்றியமைக்கிறோம்” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், பொது பணியாளர் குற்றவியல் சட்டத்தின்கீழ் சிறைத் தண்டனையை ஒரு ஆண்டாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதன்மூலம், ரூ. 500 லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 36 ஆண்டுகள் கழித்து அவருக்கு ஒரு ஆண்டுக்கான சிறைத் தண்டனை உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.