சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பேரவைத் தேர்தல்கள்: 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

5 மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றி...

News image

தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)

Updated On :17 மார்ச் 2026, 9:55 pm

நமது நிருபர்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமிழகம், புதுச்சேரி, 3 மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்கள் மற்றும் பல்வேறு மாநில பேரவை இடைத்தேர்தல்களுக்கான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக 1,111 மத்திய பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸôம், கேரளம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளன.

இதுபோன்ற தேர்தல்களின்போது தேர்தல் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் தேர்தல் ஆணையம் பார்வையாளர்களை நியமிப்பது வழக்கம். அதன்படி, மேற்கண்ட பேரவைத் தேர்தல்கள், இடைத்தேர்தலுக்காக 1,111 பார்வையாளர்களை பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாவது: தமிழகம், அஸ்ஸôம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கானதேர்தல்களுக்கும், 6 மாநிலங்களில் நடைபெறும் பேரவை இடைத்தேர்தல்களுக்கும் சேர்த்து 1,111 பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தேர்தல்களுக்கான கால அட்டவணையை அறிவித்தபோது, ஒவ்வொரு வாக்காளரும் எவ்வித அச்சமோ அல்லது பாரபட்சமோ இன்றித் தங்கள் வாக்குகளைச் செலுத்தும் வகையில், தேர்தல்கள் வன்முறையற்ற மற்றும் சலுகை இல்லாத முறையில் நடத்தப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வலியுறுத்தியிருந்தார்.

இந்த இலக்கு எட்டப்படுவதை உறுதிசெய்வதில் மத்திய பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 136 பொதுப் பார்வையாளர்களும், 40 காவல் துறை பார்வையாளர்களும், 151 செலவினப் பார்வையாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 17 பொதுப் பார்வையாளர்களும், 4 காவல் துறை பார்வையாளர்களும், 17 செலவினப் பார்வையாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கேரளத்தின் 140 பேரவைத் தொகுதிகளில் 51 பொதுப் பார்வையாளர்களும், 17 காவல் துறை பார்வையாளர்களும், 40 செலவினப் பார்வையாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 294 பொதுப் பார்வையாளர்களும், 84 காவல் துறை பார்வையாளர்களும், 100 செலவினப் பார்வையாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறும் 8 தொகுதிகளில் பொதுப் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் முறையே தலா 8 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் அனைவரும், புதன்கிழமைக்குள் (மார்ச் 18) தத்தமது சட்டப்பேரவைத் தொகுதிகளில் பணியமர்த்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பார்வையாளர்கள் அங்கு சென்றடைந்ததும், தங்கள் தொடர்பு விவரங்களை வெளியிடுவார்கள். மேலும், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிய நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் அவர்கள் நிர்ணயித்து அறிவிப்பார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Summary

Election Observers Appointed for 5 States, Including Tamil Nadu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.