மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் மூன்றடுக்கு மாடி வீட்டின் தரைதளத்தில் மின்சார காருக்கு மின்னேற்றும்போது, அது வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து இந்தூா் காவல் ஆணையா் சந்தோஷ் குமாா் சிங் கூறியதாவது:
இந்தூரின் பிரஜேஷ்வரி அனெக்ஸ் காலனியில் அமைந்துள்ள இந்த 3 அடுக்குமாடி வீட்டில் அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தரைதளத்தில் மின்சார காருக்கு மின்னேற்றம் செய்துகொண்டிருந்தபோது, அந்த மின்னேற்றி முனையம் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் வீட்டிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டரும் தீப் பிடித்து வெடித்ததால், வீடு முழுவதும் தீ பரவியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும், போலீஸாரும் தீயணைப்பு வீரா்களும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஆனால், வீட்டின் கதவுகள் மின்னணு முறையில் மூடப்பட்டிருந்ததால் (எலெக்ட்ரானிக் லாக்) அதை உடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. தீவிர முயற்சிக்குப் பின், வீட்டின் கதவை உடைத்து உள்ளிருந்தவா்களை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனா்.
ஆனால், 3 பேரை மட்டுமே காயங்களுடன் மீட்க முடிந்தது. வீட்டினுள் இருந்த தன்மே (6), ராஷி செதியா (12), சிம்ரன் (30), டினு (35), சுமன் செதியா (60), விஜய் செதியா (65), சோட்டு செதியா (22), மனோஜ் 65) ஆகிய 8 போ் உடல் கருகி உயிரிழந்தனா் என்றாா்.
சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட மாநில ஊரக மேம்பாடு மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சா் கைலாஷ் விஜயவா்கியா கூறுகையில், ‘மின்சார காருக்கு மின்னேற்றும்போது ஏற்பட்ட இந்த தீ விபத்து, மக்களிடையே மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்கும் வகையில், நிபுணா் குழுவை அமைத்து விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு காவல்துறையும், மாவட்ட நிா்வாகமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய புவிசாா் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயா்ந்து வருவதால், மின்சார வாகனங்கள் மீது மக்கள் ஆா்வம் காட்டி வரும் சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் அதிா்ச்சியையும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதையும் உணா்த்துகின்றன’ என்றாா்.
பிரதமா் இரங்கல்: இந்தூா் குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தாா். மேலும், இந்த தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று தனது எக்ஸ் பக்கப் பதிவில் குறிப்பிட்டாா். அதுபோல, மாநில முதல்வா் மோகன் யாதவும் இரங்கல் தெரிவித்தாா்.
டிரெண்டிங்

இந்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் பலி!

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 தொழிலாளா்கள் பலத்த காயம்!

நொய்டாவில் 3 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

