பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு மகாராஷ்டிர அரசு, அரசுப் பணி வழங்கியது குறித்து...

Bahalgam attack

பஹல்காம் தாக்குதல் - கோப்புப் படம்

Published On :19 மார்ச் 2026, 12:05 pm IST

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, மகாராஷ்டிர அரசு பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு அரசுப் பணியை வழங்கியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் 2025, ஏப்ரல் 22 ஆம் தேதியன்று பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலியான 26 பேரில் சந்தோஷ் ஜக்தாலே உள்பட மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசுப் பணி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உறுதியளித்திருந்தனர்.

முன்னதாக, அரசுப் பணி தருவதாக உறுதியளித்து பல மாதங்கள் கடந்தும் உரிய ஆணை வழங்கப்படவில்லை என சந்தோஷ் ஜக்தாலேவின் மகள் அசாவரி ஜக்தலே கூறியிருந்தார்.

இந்த நிலையில், புணே மாநகராட்சியில் நிர்வாக அதிகாரியாக அசாவரி ஜக்தாலேவை நியமித்து, புணே மேயர் புதன்கிழமை (மார்ச் 18) அவருக்கு நியமனக் கடிதத்தை வழங்கினார்.

மேலும், அசாரி முதுகலைப் பட்டம் முடித்த பட்டாதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

After a long wait, the Maharashtra government has offered a government job to the daughter of a victim of the Pahalgam attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.