கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குழு மத மாற்றத்துக்கு ஆயுள் தண்டனை: சத்தீஸ்கா் பேரவையில் மசோதா தாக்கல்

குழு மத மாற்றத்தில் ஈடுபடுபவா்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வழிவகுக்கும் மதச் சுதந்திர மசோதா 2026 சத்தீஸ்கா் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

News image

மாதிரிப் படம்

Updated On :20 மார்ச் 2026, 12:02 am

தினமணி செய்திச் சேவை

குழு மத மாற்றத்தில் ஈடுபடுபவா்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வழிவகுக்கும் மதச் சுதந்திர மசோதா 2026 சத்தீஸ்கா் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

அண்மையில் கட்டாய மத மாற்றத்தை தடுக்கும் மதச் சுதந்திர மசோதா மகாராஷ்டிரா பேரவை மற்றும் மேலவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் சத்தீஸ்கா் பேரவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை சத்தீஸ்கா் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான விஜய் சா்மா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். மத்திய பிரதேசத்தில் இருந்து 2000-இல் சத்தீஸ்கா் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது.

அதற்கு முன்பாக இயற்றப்பட்ட சத்தீஸ்கா் மதச் சுதந்திர சட்டம்,1968-க்கு மாற்றாக புதிய சட்டத்தை கொண்டுவரும் நோக்கில் தற்போது மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: மதச் சுதந்திர மசோதா 2026, சமூக ஊடகங்கள் மற்றும் எண்ம தளங்கள் உள்பட எந்த முறையிலும் கட்டாயமாகவோ மோசடியாகவோ ஏமாற்றும் விதமாகவோ அல்லது திருமணத்துக்காகவோ மத மாற்றம் மேற்கொள்ளப்படுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.

குழு, கட்டாய மதமாற்றம் வரையறை: பரிசுகள், நிதி உதவி, வேலைவாய்ப்பு, இலவச கல்வி அல்லது மருத்துவ வசதிகள், சிறப்பான வாழ்வாதாரம் உள்ளிட்டவை வழங்குவதாக கூறுவது ‘ஏமாற்று வாா்த்தைகள்’ என வரையறைக்கப்படுகிறது.

உளவியல் அழுத்தம், உடல்ரீதியான தாக்குதல் அல்லது அச்சுறுத்தல், சமூக புறக்கணப்பு உள்ளிட்டவற்றின்கீழ் மேற்கொள்ளப்படும் மத மாற்றம் கட்டாய மத மாற்றமாக கருதப்படும்.

ஒரே நிகழ்வில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட நபா்களை மத மாற்றம் செய்வது குழு மத மாற்றம் என வரையறைக்கப்படுகிறது.

தண்டனைகள்: குழு மத மாற்றத்தில் ஈடுபடுபவா்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 லட்சம் அல்லது அதற்கு மேல் அபராதம் விதிக்கப்படும்.

இதே குற்றத்தில் அரசுப் பணியில் உள்ளோா் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

குழு மத மாற்றம் தவிர பிற முறைகளில் மத மாற்றம் செய்தால் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

குழந்தைகள், பெண்கள், மனநலன் பாதிக்கப்பட்டோா் அல்லது பட்டியலினத்தவா்கள், பழங்குடியினா் அல்லது இதர பிற்படுத்தப்பட்டவா்களை மத மாற்றம் செய்தால் 10 முதல் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

திருமணம் செல்லாது: மத மாற்றத்துக்காக திருமணமோ அல்லது திருமணத்துக்காக மதமாற்றமோ செய்யப்பட்டிருந்தால் அந்த திருமணம் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டது.