பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்து வெளியிட்ட நபரை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
பிகார் மாநிலத்தின் அர்வால் நகரைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படங்களை மிக மோசமாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து, சிந்தாந்த் குமார் என்கிற அந்த நபரை பிகாரின் மௌலானாசக் என்ற கிராமத்தில் வைத்து தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
கைதான நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், அந்த நபர் தொடர்ந்து இவ்வாறு புகைப்படங்களைச் சித்திரித்து வெளியிட்டதும், அவற்றைப் பல்வேற்று சமூக வலைதளக் கணக்குகளில் பதிவிட்டதும் தெரியவந்தது.
அவரின் பதிவுகள் மக்களைத் தவறாக வழிநடத்தி பொது அமைதியைக் குலைக்கும் என்பதால் அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், பாஜக பெண் தலைவர்கள் பலருடைய படங்களையும் மார்பிங் செய்ததாகவும் அந்த நபர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட காவல்துறையினர் அந்த நபர் மீது 336 (4) (போலி ஆவணங்களைத் தயாரித்தல்), 356 (அவதூறு), 351 (1) (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாகத் தெரிவித்தனர்.
Summary
Delhi Police arrests man for posting objectionable AI images of PM Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் அமைச்சரவை விரிவாக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ உதவுவதாகக் கூறிய பிகார் நபர் கைது!
பிரதமர் கேரளம் வருகை: இன்றும் நாளையும் கோவையில் டிரோன்கள் பறக்கத் தடை!

ஏஐ மூலம் பிரதமர் மோடியின் படம் தவறாகச் சித்திரிப்பு: ஒருவர் கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு


