தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பஹல்காமில் வெளிநாட்டுப் பயணிகளின் தகவல்களை வழங்காத ஹோட்டல் மீது வழக்குப்பதிவு!

23 வெளிநாட்டுப் பயணிகளின் தகவல்களை வழங்காத ஹோட்டல் மீது வழக்குப்பதிவு...

ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் - கோப்புப் படம்

Published On :23 மார்ச் 2026, 4:22 pm IST

ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டவர் 23 பேரின் தகவல்களை வழங்காத பஹல்காம் ஹோட்டல் மீது ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஹோட்டல்களில் வெளிநாட்டவர் தங்கும்போது அதற்குரிய ஃபார்ம் - சி எனப்படும் ஆன்லைன் படிவத்தை ஹோட்டல் நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும். இதனை, காவல்துறையினர் வழக்கமாக சோதனை செய்வார்கள்.

இந்த நிலையில், ஜம்மு- காஷ்மீடின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் உள்ள தேவாதூ பகுதியில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அதில், ஹோட்டல் மிஸ்டி மவுண்டைன்ஸ் எனும் ஹோட்டலில் பிரிட்டனைச் சேர்ந்த 19 பேர் உள்பட 23 வெளிநாட்டினர் மார்ச் 22 வரை தங்கியிருந்தனர். ஆனால், அதுபற்றி காவல்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆன்லைன் படிவங்களை ஹோட்டல் நிர்வாகம் சமர்ப்பிக்கவில்லை.

இது வெளிநாட்டினர் மற்றும் குடியேறுதல் சட்டம் 2025 - ஐ மீறுவதாகவும், பாதுகாப்பு நெறிமுறைகளைச் சீர்குலைப்பதாகவும் குறிப்பிட்டு ஹோட்டல் நிர்வாகம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், ஹோட்டல்களில் தங்கும் வெளிநாட்டவர்கள் குறித்த தகவல்களை சரிவர வழங்கவேண்டும் என்றும், மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தப் பகுதி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Summary

J&K Police register FIR against Pahalgam hotel for failing to report stay of 23 foreigners

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.