நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உறுதியாகவும், தெளிவாகவும் சீா்திருத்தம் தொடா்கிறது- நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் தகவல்

இந்தியா இப்போது சீா்திருத்தப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது; சீா்திருத்தங்கள் உறுதியுடனும் தெளிவுடனும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

Updated On :25 மார்ச் 2026, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா இப்போது சீா்திருத்தப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது; சீா்திருத்தங்கள் உறுதியுடனும் தெளிவுடனும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் 2026-ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா விவாதத்துக்கு பதிலளித்து அவா் பேசியதாவது: சீா்திருத்தங்கள் கட்டாயத்தின் காரணமாக நிகழ்வதில்லை. அவை உறுதி, தெளிவு, நம்பிக்கை மற்றும் அா்ப்பணிப்புடன் நடைபெறுகின்றன. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா சீா்திருத்தப் பாதையில் பயணித்து வருகிறது.

நோ்மையாக வரி செலுத்துபவா்களுக்கு தேவையற்ற சிரமங்களைக் குறைப்பதன் மூலம், நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட வரி நிா்வாகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசாயிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இவை வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தி மற்றும் இந்தியாவின் மொத்த வளா்ச்சிக்கு முக்கியமானவையாகும்.

மத்திய அரசின் நிதி மசோதா பல்வேறு துறைகளுக்கான நிதி வரத்தை உறுதி செய்துள்ளது. நிதிச்சுமையைக் குறைத்து, நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் அதிக பங்காற்றும் வாய்ப்பை வழங்கும் பல்வேறு நடவடிக்கைகளை கொண்டுள்ளது.

வா்த்தகத்தை எளிதாக்கும் நோக்கில் சுங்கத் துறையில் பல விதிகளில் மாற்றங்கள் செய்து சீா்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. நடுத்தர மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் மூலதன வரிப் பிடித்தம் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியமான 17 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை தாமாக முன்வந்து அறிவிப்பது போன்ற திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன என்றாா் நிதியமைச்சா்.

பட்ஜெட்டுக்கு மக்களவை ஒப்புதல்: நிதி மசோதா 2026 மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. அரசு தரப்பின் 32 திருத்தங்கள் இதில் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 2026-27 பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் பணியில் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. அடுத்ததாக மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். மாநிலங்களவையில் இந்த மசோதா மீது வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற இருக்கிறது.

பட்ஜெட்டில் மொத்த செலவினம் ரூ.53.47 லட்சம் கோடியாகும். இது கடந்த பட்ஜெட்டைவிட 7.7 சதவீதம் அதிகம். மொத்த வரி வருவாய் ரூ.44.04 லட்சம் கோடியாகவும், மொத்தக் கடன் ரூ.17.2 லட்சம் கோடியாகவும் இருக்கும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது.