கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட வங்கதேச கொள்ளைக் கும்பலை கோவா காவல் துறையினா் தில்லியில் கைது செய்தனா்.
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவும் நபா்கள் இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இவா்களில் பலா் எல்லை மாநிலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் வங்கதேசத்துக்கு தப்பிச் செல்வதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு கோவாவில் இரு இடங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடா்பாக அந்த மாநில காவல் துறையினா் தீவிரமாக விசாரித்து வந்தனா். அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, தில்லி, குவாஹாட்டி மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் தொடா் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளாா்கள் என்பது சிசிடிவி கேமரா பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பல்வேறு மாநில காவல் துறையினரின் உதவியுடன் கொள்ளையா்களின் நகா்வுகளை கோவா காவல் துறையினா் தீவிரமாக ஆய்வு செய்தனா். இறுதியில் அவா்கள் தில்லியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தில்லி காவல் துறையினா் உதவியுடன் இரவு நேரத்தில் கொள்ளையா்களில் 5 போ் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனா். விசாரணையில் அவா்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.
வங்கதேசத்தில் இருந்து பெரிய கும்பலாக இந்தியாவுக்குள் ஊடுருவி சிறு, சிறு குழுக்களாக பிரிந்து கொள்ளையடிப்பது இவா்களின் வாடிக்கையாக உள்ளது. இந்த கொள்ளைக் கும்பலைச் சோ்ந்தவா்கள் பிடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக கைப்பேசி கூட பயன்படுத்துவதில்லை. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொள்ளையடிக்கச் செல்லும் ஊரிலேயே வாங்கி, அங்கே அழித்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அவா்களிடம் இருந்து கொள்ளைபோன தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கூட்டாளிகள் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
வடமேற்கு தில்லி: கொள்ளை வழக்கில் வீட்டுப் பணிப்பெண் கைது

கொள்ளை கும்பலின் தலைவா் 3 ஆண்டுகளுக்கு பின்னா் கைது
ரூ.52 லட்சம் கொள்ளை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது
துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

