மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

வணிக சிலிண்டர் விலை உயர்வு! மோடி அரசுக்கு பணம் பறிக்க மட்டுமே தெரியும்: காங்கிரஸ்

வணிக சிலிண்டர் விலை, 4 மாதங்களில் ரூ. 1,518 உயர்த்தப்பட்டதாக பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Commercial LPG cylinder prices hiked

காங்கிரஸ் எம்.பி.க்கள் - கோப்புப் படம்

Published On :

வணிக சிலிண்டர் விலையைக் குறிப்பிட்டு, பாஜக அரசுக்கு பணம் பறிக்க மட்டுமே தெரியும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்து, ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது.

இந்த நிலையில், கடந்த 4 மாதங்களில் வணிக சிலிண்டர்களின் விலை ரூ. 1,518 உயர்த்தப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பணவீக்க மனிதர் மோடி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இன்று வணிக சிலிண்டரின் விலை ரூ. 993 உயர்ந்துள்ளது.

கடந்த 4 மாதங்களில் மோடி உயர்த்திய வணிக சிலிண்டரின் விலைப் பட்டியல்,

ஜனவரி 1 - ரூ. 111

பிப்ரவரி 1 - ரூ. 50

மார்ச் 1 - ரூ. 31

மார்ச் 7 - ரூ. 115

ஏப்ரல் 1 - ரூ. 218

மே 1 - ரூ. 993

மொத்தம் - ரூ. 1,518

இந்த வருடத்தில் இன்னும் 8 மாதங்கள் உள்ளன. மோடி அரசுக்கு பணம் பறிக்க மட்டுமே தெரியும். இப்போது, சிறிய 5 கிலோ சிலிண்டரின் விலையைகூட (ரூ. 261) உயர்த்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Summary

Congress slams BJP Government of Hiking Commercial Cylinder Prices by Rs. 1,518 in Four Months.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.