வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

முறைகேடு புகார்: வாக்குப்பெட்டி அறையில் 4 மணி நேரம் இருந்த மமதா பானர்ஜி!

பவானிபூர் தொகுதியில் உள்ள வாக்குப்பெட்டிகள் உள்ள அறையில் மமதா பானர்ஜி 4 மணி நேரம் இருந்தது பற்றி....

News image

வாக்குப்பெட்டிகள் உள்ள அறையில் மமதா பானர்ஜி - PTI

Updated On :1 மே 2026, 12:08 pm IST

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததையடுத்து பவானிபூரில் உள்ள வாக்குப்பெட்டிகள் இருக்கும் பாதுகாப்பு அறைக்கு முதல்வர் மமதா பானர்ஜி நேரடியாகச் சென்று அங்கு 4 மணி நேரம் வரை இருந்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தோ்தல் நடந்து முடிந்த நிலையில் மற்ற 4 மாநிலங்களுடன் சேர்த்து வருகிற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் மேற்குவங்கத்தில் திரிணமூல் மற்றும் பாஜக இடையே கடும்போட்டி நிலவும் என தெரிகிறது. பாஜக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

வாக்குப்பதிவு முடிவடைந்த சிறிது நேரத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல் வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டதாக திரிணமூல் கட்சி குற்றம் சாட்டியது.

இந்நிலையில், தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்குச் சென்ற முதல்வர் மமதா பானர்ஜி இன்று திடீரெனச் சென்றார். அங்கு சுமார் 4 மணி நேரம் இருந்துள்ளளர். வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யவுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவ்வாறு யாரேனும் முறைகேடு செய்ய முயன்றால் கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

"வாக்கு எண்ணும் செயல்பாட்டில் முறைகேடு செய்ய எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். வேட்பாளரோ அல்லது அவரது முகவர்களில் ஒருவரோ மேல்மாடியில் தங்கலாம். ஊடகங்களுக்காக சிசிடிவி கேமரா பொருத்தவும் நான் பரிந்துரைத்துள்ளேன்.

மக்களின் வாக்குகள் பாதுகாக்கப்பட வேண்டும். புகார்கள் வந்த பிறகுதான் நான் இங்கு அவசரமாக வந்தேன். மத்தியப் படைகள் ஆரம்பத்தில் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில் முறைகேடு செய்ய ஏதேனும் திட்டம் இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது" என்று தெரிவித்தார்.

Summary

Mamata Banerjee Visit To Strongroom in bhabanipur Trinamool Protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.