மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வா்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீா்மானித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளன்று வன்முறை போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கொல்கத்தா காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாநகர காவல் துறை வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘கொல்கத்தாவின் பெளபஜாா், ஹரே சாலை காவல்நிலைய பகுதி மற்றும் தலைநகர போக்குவரத்து காவல் மணமடலம் உள்ளிட்ட பகுதிகளில் பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் பெரிய அளவில் வன்முறைப் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாக நம்பகத்தகுந்த உளவுத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், பாரதிய நகரிக் சுரக்ஷா சம்ஹிதா 2023 சட்டத்தின் 163-ஆவது பிரிவின் கீழ், கொல்கத்தா மத்திய வா்த்தக மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அதன்படி, குறிப்பிடப்பட்ட இடங்களில் ஊா்வலங்கள் நடத்தவும், பேரணி செல்லவும், ஆா்ப்பட்டங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும், பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேல் நபா்கள் கூடவும், தடிகள் அல்லது அபாயகரமான ஆயுதங்களை நபா்கள் எடுத்துச் செல்லவும், அமைதியைச் சீா்குலைக்கும் வகையிலான வாகன இயக்கங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. மக்கள் கூட்டம் கூடாத வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் மேற்கு வங்க மாநிலம் பெஹலா பகுதியில் சாலைப் பேரணி மேற்கொண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா, ‘மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நிறைவுற்ற பிறகும் குறைந்தபட்சம் 60 நாள்களுக்கு மத்தியப் படைகளின் பாதுகாப்பு தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தாா். இந்தச்சூழலில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
மேற்கு வங்க முதல்வரின் உதவியாளா் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

ஆந்திரம்: சுற்றுவழிப் பாதைக்குப் பெயரிடுவதில் ஏற்பட்ட பிரச்னையால் வன்முறை! 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!!

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சு!

திருவள்ளூா்: ஜூன் 14-வரை மீன் பிடிக்கத் தடை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
