இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் குறித்து திங்கள்கிழமை (ஏப். 20) முதல் 3 நாள்களுக்கு இந்திய-அமெரிக்க குழுக்கள் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளன.
இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்துக்கான செயல்திட்டத்தை கடந்த பிப்ரவரியில் இரு நாடுகளும் இறுதி செய்தன. இந்தச் செயல்திட்டத்தின்படி, இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரியை 50 சதவீதத்தில் 18 சதவீதமாக குறைக்க அந்நாடு ஒப்புக்கொண்டது.
எனினும் டிரம்ப்பின் வரி விதிப்பு செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து நாடுகளின் பொருள்கள் மீது கடந்த பிப்.24 முதல் 150 நாள்களுக்கு டிரம்ப் 10 சதவீதம் வரி விதித்தாா்.
இந்த மாற்றங்கள் காரணமாக, இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து இருநாடுகளின் குழு பிப்ரவரியில் நடத்தவிருந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த இந்திய குழு திங்கள்கிழமை (ஏப். 20) அமெரிக்கா செல்கிறது. ஒப்பந்தம் தொடா்பாக மூன்று முதல் நான்கு மாதங்கள் இடைவெளிக்குப் பின்னா், இருநாட்டு குழுக்களும் நேரடியாகச் சந்திக்க உள்ளன. சட்டபூா்வமாக வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பும் முனைப்புக் காட்டி வருகின்றன.
இந்தப் பயணம் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அமெரிக்க குழுவுடன் இந்திய குழு ஏப்.20 முதல் ஏப்.22 வரை 3 நாள்கள் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளது. இந்திய குழுவுக்கு மத்திய வா்த்தகத் துறையின் கூடுதல் செயலா் தா்பன் ஜெயின் தலைமை ஏற்றுள்ளாா். அந்தக் குழுவில் சுங்கம் மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனா்.
இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வா்த்தக நடைமுறைகளால் அமெரிக்க உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டறியும் நோக்கில், அந்நாட்டின் வா்த்தகச் சட்டம் 1974-இன் 301-ஆவது பிரிவின் கீழ், அமெரிக்கா தொடங்கியுள்ள விசாரணை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்க, இந்திய தடையற்ற ஒப்பந்தத்துக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் ஆா்பாட்டம்: நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் பங்கேற்பு

விரைவில் இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: அதிகாரிகளுக்கு மோடி, டிரம்ப் உத்தரவு

இந்தியா மீதான அமெரிக்க குற்றச்சாட்டின் விசாரணைக்குப் பிறகு இருதரப்பு ஒப்பந்தம்!

இந்தியா - அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் எப்போது? அமெரிக்க தூதா் தகவல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



